Saturday, July 25, 2009

பதிவுலகம்!

சொன்னாங்க சொன்னாங்க,
எதோ பிரச்சினையின்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

தமிழ்மணத்துல ஓட்டையுன்னுஞ்
சொன்னாங்க, தமிலீசுல ஒடசலுன்னுஞ்
சொன்னாங்க, சொன்னாங்க!

வெவரமாச் சொல்லுன்னு சொன்னாக்க
அதுல எதோ உள்குத்துன்னுஞ்
சொன்னாங்க, சொன்னாங்க!

அவருக்கும் இவருக்கும் மோதலுன்னு
சொல்லிச் சொன்னதுல உண்மைகள்பல
சொன்னாங்க, சொன்னாங்க!

தன்னன தன்னன தானத்தன்னன
தன்னன தன்னன தன்னன
தானாதீந்தன தானாதீந்தன!

பின்னூட்டமின்னு சொன்னாங்க
மறைவுல பேசிச் செய்யுறதுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

இவரு அவரோட ஆளுன்னுஞ் சொன்னாங்க
எழுதுறத நிப்பாட்டப் போறாராமுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

ஆனாப் போன மச்சாஞ் திரும்பி
வந்து கும்மியடிக்கத்தான் போறாருன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

நாம எல்லாம் ஒரே குடும்பமுன்னு
ஆரத்தழுவி ஆறுதலுஞ் சொல்லிச்
சொன்னாங்க சொன்னாங்க!

பார்ப்பானுன்னுஞ் சொன்னாங்க கேலியுஞ்
செஞ்சாங்க ஊதுகுழலுன்னுஞ் சொல்லிச்
சொன்னாங்க, சொன்னாங்க!

ஆவேசங் கொண்டாங்க, ஓட்டும் போட்டாங்க
பிரபலமுன்னுஞ் சொல்லிகிட்டாங்க; யாரு, தானொரு
தமிழன்னு சொன்னாங்க சொன்னாங்க?!

இடுகையத் திருடிட்டாங்கன்னு சொல்லிச்
சொல்லுற ஒப்பாரி கேட்டு நாளாயிட்டுதுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

தன்னன தன்னன தானத்தன்னன
தன்னன தன்னன தன்னன
தானாதீந்தன தானாதீந்தன!

சொன்னாங்க சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க!

Saturday, July 18, 2009

கசடு கலந்த இதழியல்!

காலம் பொன் போன்றது!
கடமை கண் போன்றது!!
ஆனால் வாய்மை?

வாய்மை உயிர்
போன்ற தெனச்
சொல்லியதா தமிழகம்??

கசடு கலந்த இதழியல்
இச்சையில் மனிதமே
மரித்துப் போகிறது!

அதில் எந்தன் படைப்பு
இப்பக்கத்தில் என்கிறாய்
இத்துதல் அறியாமல்!

உண்மை உரைத்திடு
உடனே உதித்தல்
உந்தன் உருவாய்!

அறமே அறிவாய்
இறையே திறமாய்
புறமே துறவாய்

இதழியல் கொண்டு
இத்தழியலை விருட்டென
வென்று கொன்றுவிடு!

மானுடம் தழைக்கும்! கசடு கழியும்!!