Saturday, July 18, 2009

கசடு கலந்த இதழியல்!

காலம் பொன் போன்றது!
கடமை கண் போன்றது!!
ஆனால் வாய்மை?

வாய்மை உயிர்
போன்ற தெனச்
சொல்லியதா தமிழகம்??

கசடு கலந்த இதழியல்
இச்சையில் மனிதமே
மரித்துப் போகிறது!

அதில் எந்தன் படைப்பு
இப்பக்கத்தில் என்கிறாய்
இத்துதல் அறியாமல்!

உண்மை உரைத்திடு
உடனே உதித்தல்
உந்தன் உருவாய்!

அறமே அறிவாய்
இறையே திறமாய்
புறமே துறவாய்

இதழியல் கொண்டு
இத்தழியலை விருட்டென
வென்று கொன்றுவிடு!

மானுடம் தழைக்கும்! கசடு கழியும்!!

5 comments:

தேவன் மாயம் said...

கசடு கலந்த இதழியல்
இச்சையில் மனிதமே
மரித்துப் போகிறது!//

ஆம் நண்பரே!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
காலம் பொன் போன்றது!
கடமை கண் போன்றது!!
ஆனால் வாய்மை?

வாய்மை உயிர்
போன்ற தெனச்
சொல்லியதா தமிழகம்??//

பொருள் நிறைந்த சொற்கள்!

//
கசடு கலந்த இதழியல்
இச்சையில் மனிதமே
மரித்துப் போகிறது!
//

உங்கள் பக்கங்களைப் படித்து வருவோர்க்கு பொருள் புரியும்!! வாழ்த்துகள்!

Anonymous said...

//அறமே அறிவாய்
இறையே திறமாய்
புறமே துறவாய்
இதழியல் கொண்டு
இத்தழியலை விருட்டென
வென்று கொன்றுவிடு!//

ஆகா.. அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

vasu balaji said...

/கசடு கலந்த இதழியல்
இச்சையில் மனிதமே
மரித்துப் போகிறது!/

ரொம்ப சரி.

Thekkikattan|தெகா said...

பழம,

இங்கும் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நல்ல தொடக்கம். தொடர்ந்து இங்கும் எழுதி வாருங்கள்...

Post a Comment