நம்மாளுக்கு பாட்டு பாடுறதுலயே, அந்தலை சிந்தலை கழண்டு போகுது; அந்த சின்னப் பொண்ணு அனகா, எப்படிக் கண்ணுலயே பாடிக் கலங்கடிக்குதுன்னு சித்த பாருங்க மக்கா!
Sunday, August 16, 2009
நேற்றைய பொழுது கழிந்தது இதில்....
வணக்கம். பதிவுலகின் மூலமாக எனக்கு வாய்த்த, பெரு நாட்டு நண்பர் கடந்த வாரம் அலைபேசியில் அழைத்து, அளவளாவிக் கொண்டு இருந்தார். பெரு, உருகுவே நாடுகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க, நான் அவரது விவரிப்பில் ஆழ்ந்து போனேன். அதன் தாக்கத்தில் நேற்றைய பொழுது, அது பற்றிய மேலதிகத் தேடலில் கழிந்தது.
Sunday, August 9, 2009
Saturday, August 1, 2009
பதிவர் கூடலுக்கான அழைப்பு!

ஆகசுடு 01, 2009 சனிக்கிழமை
சார்லத், வட கரோலைனா மாகாணம்
மாலை ஆறு மணி
தலைமை: அண்ணன் சீமாச்சு அவ்ர்கள்
சிறப்பு விருந்தினர்: தென்றல் தென்னவன் அவர்கள்
அமெரிக்காவிலே Citizen journalism எனப்படுகிற மக்கள் செய்தித்துறை மேலோங்கி வருகிற இக்கால கட்டத்தில், மக்கள் இதழியலில் தமிழின் பங்கு, தமிழனின் பங்கு என்கிற தலைப்பில் கலந்துரையாட, பதிவர்கள் மற்றும் அவர்கள்தம் நண்பர்கள் என அனைவரையும் வந்திருந்து சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி, வருக வருக என ஐக்கிய அமெரிக்க தென்கிழக்கு மாகாணங்களின் தமிழ்ப் பதிவர்கள் சார்பாக அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
பணிவுடன்,
பழமைபேசி.
(மேலதிக விபரங்களுக்கு பழமைபேசியின் விபரப்பட்டையில் இருக்கும் மின்னஞ்சலில் தோடர்பு கொள்ளவும்!)
தமிழனின் விருந்தோம்பல் அகால மரணம்!
Subscribe to:
Posts (Atom)