Monday, November 22, 2010

தோற்கிறேன்!

தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

பாதுகாப்பிசம்
நான் தெரிவு செய்த பாதை
நவீன உலகில்
எவரும் மதியாத பாதை...
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

இருப்பின் உறுதி அவசியம் என்றேன்
விடுதலைக்கு எதிரானவனாய்
ஆக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

அடிப்படையே முதல் என்றேன்
முன்னேற்றத்தின் எதிரியாய்ச்
சித்தரிக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

வழுவைக் களையவல்லது பழைமை என்றேன்
புதுமையின் தடைக்கல்லென
முன்னிறுத்தப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

ஆம்; தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!
தாராளமயத்தின் தாக்கத்தில்
தாக்குப்பிடிக்காது
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!

நான் இறந்த பிறகாவது
இருப்பிற்கான உறுதியின் அவசியம்
மெய்ப்படும் எனும் நினைப்பில்
தெரிந்தே தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

விதைப்பவன் வீழ்ந்திடினும்
விதைகள் எழும்!!

8 comments:

vasu balaji said...

ஆஹா. :))

VELU.G said...

இங்கு யாரும் தோற்பதில்லை. நம்பிக்கையுடன் இருக்கலாம்.

அருமையான நடையில் கவிதை

Thangarajan said...

நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

தோற்பதில் மட்டும் வெற்றி!

Learn said...

காவி வரிகள் அருமை

வருண் said...

இப்படி தோத்துக்கொண்டே இருந்தால் தோல்வி ரொம்ப கஷ்டமாயிருக்காது, பழகிப்போயிடும். வெற்றியடைந்தால்தான் ஏதோ புதுமையா, புரியாத மாதிரி இருக்கும்! :)

john danushan said...

நல்ல கவிதை

G.M Balasubramaniam said...

அனுபவப்பட்டவன் நான் எழுதியிருக்கும் வெற்றியும் தோல்வியும் படித்துப் பாருங்களேன்.SUCCESS IS A MEASURE AS DECIDED OTHERS. SATISFACTION IS A MEASURE AS DECIDED BY YOU.

Post a Comment