Wednesday, February 2, 2011

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....




சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுபடுபடுவென போர்த்திய புல்வெளி
தொடத்தொடத்தொடத்தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச்சுடச்சுட கிடைக்கிற இட்டிலி
தடதடதடவென அதிர்கிற ரயிலடி
கடகடகடவென கடக்கிற காவிரி
விறுவிறுவிறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ) (2)
(ஏ பல்லேலக்கா)


சட்டென சொல்லு சட்டென சொல்லு
ஏலேலே கிராமத்துக் குடிசையிலே
கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஓட்டை விரிசல்வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செலஃபோனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்
ஆலமரத்துக்கு ஜடையை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே
(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)
சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே
ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
ஆடுமாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும்
வெறும்தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்
(காவிரி ஆறும்)

சொல்கட்டு




இடம்: Miami University Collegiate Chorale under the direction of Jeremy Jones

7 comments:

Rathnavel Natarajan said...

Interesting Kavithai.

வருண் said...

///Miami University Collegiate Chorale under the direction of Jeremy Jones //

:-)

சாமக்கோடங்கி said...

என்ன கவிதையா..அடப்பாவிங்களா இது ஒரு படத்துல வந்த பாட்டுபா..

Thangarajan said...

nice....

Unknown said...

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

கிராமீய மணம் வீசும் கவிதை

அருமை அருமை
தொடர வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

G.M Balasubramaniam said...

ஐயா பழமைவாசி, என் பதிவில் பின்னூட்டமிட்ட வர் யார் என்று அறியும் ஆவலில் உம்மைத் தேடி மலர்கள் பதிவுக்கு வந்தேன். ஒரே ஆச்சரியம். கூடவே சந்தேகம். அந்தப் பாட்டு பாடியவர்களும் சொல் கட்டு போட்டவர்களும் அயல் நாட்டினரா. ?அருமை. நான் மிகவும் ரசித்தேன்.இல்லை ஏதாவது தமாஷ் இல்லையே. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா

மறந்து போகாத பசுமை நிறைந்த நனைவுகள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Post a Comment